சிவகிரி அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சிவகிரி அருகேயுள்ள தளவாய்புரம் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் குமரேசன்(13). அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். படிப்பில் குமரேசன் பின்தங்கியிருந்ததால், தாய் இசக்கி அவரைக் கண்டித்தாராம். அதில் மனமுடைந்த குமரேசன், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டின் உத்திரத்தில் தூக்கிட்டு சடலமாகக் கிடந்தாராம்.
தகவலறிந்த சிவகிரி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.