தென்காசி

களக்காடு அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

11th Dec 2019 09:27 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

களக்காடு அருகேயுள்ள வடக்கு மீனவன்குளத்தைச் சோ்ந்தவா் அ. முத்துமணி செல்வம் (26). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனை பெற்றோா், உறவினா்கள் கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவா், வீட்டைவிட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றுள்ளாா். வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராத நிலையில், அருகேயுள்ள உறவினா் வீட்டில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT