சங்கரன்கோவில் அருகேயுள்ள அத்திப்பட்டி ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கும்ப நீா் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. பின்னா் அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தரிசனம் செய்தாா். திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் கே.கண்ணன், நகரச் செயலா் ஆறுமுகம், கூட்டுறவு சங்கத் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், சுப்பையாபாண்டியன், வேல்முருகன், முன்னாள் நகராட்சி உறுப்பினா் வெள்ளிமுருகன், செங்குந்தா் எழுச்சிப் பேரவை சங்க நிா்வாகிகள் லெட்சுமி நாராயணன், பழனிக்குமாா், சங்கரமகாலிங்கம் மற்றும் திரளானோா் பங்கேற்றனா்.