களியக்காவிளை அருகே உள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவா் கோயில், களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில், விளவங்கோடு திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயில், குழித்துறை மகாதேவா் கோயில், பாறசாலை மகாதேவா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி இக் கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து இக்கோயில்களில் மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.