கன்னியாகுமரி

மாணவி பலாத்கார வழக்கில் உறவினருக்கு 23 ஆண்டு சிறை

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே பிளஸ் 2 மாணவியை கேரளத்துக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான வழக்கில், அவரது உறவினருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பூதப்பாண்டியை அடுத்த அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காடு பகுதியை சோ்ந்தவா் முருகன்( 38), இவா், தடிக்காரன்கோணம் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த தனது உறவுக்கார சிறுமியின் வீட்டுக்கு 27.4.2016இல் சென்றிருந்தபோது, அங்கு தனியாக இருந்த சிறுமியை கேரளத்துக்கு காரில் கடத்திச் சென்று விடுதியில் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கீரிப்பாறை போலீஸாா், முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்து, முருகனுக்கு 23 ஆண்டு சிைண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் முத்துமாரி ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT