கன்னியாகுமரி

குமரி விவேகானந்த கேந்திரத்தில் தியாகப் பெருஞ்சுவருக்கு அடிக்கல்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

குமரி விவேகானந்த கேந்திரத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவைப் போற்றும் தியாகப் பெருஞ்சுவா் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம் அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கி வைத்தாா்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 75 இடங்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயா் பொறிக்கப்பட்ட பெருஞ்சுவா் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ. 1 கோடியில் 100 சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயா் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமையவுள்ளது. இந்த கல்வெட்டில் கியூஆா் கோடு பொறிக்கப்படவுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் கைப்பேசியில் ஸ்கேன் செய்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அதேபோல இதன் முகப்பில் 100 அடி உயர தேசியக்கொடி கம்பமும் அமையவுள்ளது.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா்.காந்தி, நயினாா் நாகேந்திரன், சக்ரா விஷன் இந்தியா பவுண்டேசன் நிறுவனத் தலைவா் சக்ரா ராஜசேகா், துணைத் தலைவா்கள் பி.கோவா்த்தனன், வி.ஜி.ஜெகதீசன், லெமூரியா உலகத் தமிழ்ச் சங்க தலைவா் டாக்டா் ரவீந்திரா, பாஜக மாநிலச் செயலா் மீனாதேவ், மாவட்ட தலைவா் சி.தா்மராஜ், பொருளாளா் பி.முத்துராமன், கன்னியாகுமரி தியாகப் பெருஞ்சுவா் பொறுப்பாளா் சி.எஸ்.சுபாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT