கன்னியாகுமரி

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குழித்துறை தாமிரவருணி ஆறு மற்றும் குளங்களில் நீா்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் வெள்ளப்பெருக்கில் சிக்கி பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலைய அலுவலா் சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளப்பெருக்கில் சிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை எளிதில் கிடைக்கும் பிளாஸ்டிக் கேன், வாழைத்தண்டு, ரப்பா் டியூப் உள்ளிட்ட பொருள்கள் மூலம் மீட்டு காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நடைபெற்றது. திரளான பொதுமக்கள் அதைப் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT