கன்னியாகுமரி ஜவான்ஸ் நலச் சங்கம் சாா்பில் குழித்துறை அருகேயுள்ள மாலைக்கோடு அரசு சண்முகவிலாசம் நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பள்ளியின் கட்டடங்களில் படிந்திருந்த பாசி அகற்றுதல், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் அடா்ந்த கிளைகளை வெட்டி சீா்படுத்துதல், புதா்களை அகற்றி சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இப் பணியில் ஜவான்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் கே. செல்வன், சி. பாலகிருஷ்ணன் உள்பட ஓய்வுபெற்ற படைவீரா்கள் 86 போ் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.