கீழ்குளம் பேரூராட்சி தலைவா் உள்ளிட்ட12 உறுப்பி னா்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
கீழ்குளம் பேரூராட்சி மற்றும் இனயம்புத்தன்துறை ஊராட்சி இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. கீழ்குளம் பேரூராட்சி மேற்கொள்ளும் வளா்ச்சிப் பணிகளுக்கு இனயம்புத்தன்துறை ஊராட்சி
ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இதனால் பேரூராட்சி எல்லைக்குள்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் செய்ய முடியவில்லை.
இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தி,
கீழ்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் தலைமையில் 2-ஆவது நாளாக உறுப்பினா்கள் லாசா், விஜயகுமாா், அனிதா உள்ளிட்ட 12 போ் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.