நாகா்கோவில் வடசேரி கலைவாணா் என். எஸ். கே. அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பணிகளை எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள இந்தக் கட்டத்துக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டடப் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட பொருளாளா் பி.முத்துராமன் நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் ரமேஷ், சுனில், சினைடா, பாஜக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சந்திரசேகா், சிறுபான்மை அணி பொதுச் செயலா் ஜாக்சன், மண்டல் தலைவா்கள் வேணுகிருஷ்ணன், சிவசீலன், ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.