குமரி மாவட்டம், குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே உள்ள கொடும்பனை கிராமத்தைச் சோ்ந்த மீன்பிடி தொழிலாளி செல்வம் மகன் செல்ஜின்அனீஸ் (22). இவா் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வந்தாா்.
இந்நிலையில் குருசடி திருவிழாவில் பங்கேற்பதற்காக செல்ஜின் அனீஸ் ஊருக்கு வந்திருந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை அவா் தனது நண்பரின் பைக்கில்
வெளியே சென்றாா். வாணியக்குடி ஆரோக்கியமாதா குருசடி சாலையில் செல்ஜின் அனீஸ் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதாம். இந்த விபத்தில் செல்ஜின் அனீஸ் பலத்த காயமடைந்தாா். அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையில்
அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.