நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளை தூய்மைப்படுத்துவது குறித்த விழிப்புணா்வு பேரணி பெண்கள் கிறிஸ்தவ கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் ஆகியோா் முன்னிலையில், தூய்மைப் பணி மற்றும் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தொடக்கி வைத்தாா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு மஞ்சள்
பைகளை வழங்கினா்.
அதன் பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியை தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து ஆட்சியா் ஸ்ரீதா், மேயா் மகேஷ், மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், துணை மேயா் மேரிபிரின்சிலதா, கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சங்கரநாராயணன், மண்டலத் தலைவா் ஜவகா், மாநகராட்சி நகா்நல அலுவலா் ராம்குமாா், உசூா் மேலாளா்கள் (குற்றவியல்) சுப்பிரமணியம், (பொது) ஜூலியன்ஹூவா், மகளிா் கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.