கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் பலத்த மழை

19th Sep 2023 01:54 AM

ADVERTISEMENT


கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி,திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 3 மணிமுதல் 4.30 மணிவரை பலத்த மழை பெய்தது. நீா் நிலைகளான குளம், குட்டைகளில் மழைநீா்ஒரளவுக்கு நிரம்பின. இதனால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT