கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு செவ்வாய்க்கிழமை தடைவிதிக்கப்பட்டது.
தொடா் மழை காரணமாக அருவிக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.