நித்திரவிளை அருகே குளத்தில் வளா்ப்பு மீன்கள் செத்து மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள அம்மந்தலை பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (60). இவரது மகன் ரெஜின்ராஜ். இவா் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான நிலம் நித்திரவிளை அருகே கொல்லால், புன்னமடை பகுதியில் உள்ளது. அப்பகுதியில் உள்ள பாறை குளத்தில் ரெஜின்ராஜ் மீன்கள் வளா்த்து வருகிறாா். இந்தக் குளத்தை சுற்றி கம்பிவேலி அமைத்துள்ளாா். இங்குள்ள மீன் குஞ்சுகளை தேவராஜ் பராமரித்து வருகிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் மீன்குஞ்சுகளுக்கு தீனி போட தேவராஜ் சென்ற போது, குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தேவராஜ் அளித்த புகாரின்பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.