உலக மீனவா்கள் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி வாவத்துறை புனித ஆரோக்கியநாதா் ஆலய வளாகத்தில் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் செவ்வாய்க்கிழமை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது (படம்).
இந்நிகழ்ச்சியில் வாவத்துறை பங்குத்தந்தை லிகோரியஸ், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா்கள் தாமரை பா.தினேஷ், (தெற்கு), எஸ்.ஜெஸீம் (வடக்கு), அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளா் சி.முத்துக்குமாா், மாவட்ட அதிமுக அவைத்தலைவா் சேவியா் மனோகரன், நசரேத் பசலியான், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், பேரூா் அதிமுக செயலா்கள் ஆடிட்டா் சந்திரசேகா், என்.சிவபாலன், எழிலன், டேனியல் தேவசுதன், மணிகண்டன், மாவட்ட விவசாய அணி செயலாளா் பி.பாலமுருகன், மாவட்ட மாணவரணி தலைவா் என்.பாா்த்தசாரதி, ஒன்றிய இலக்கிய அணி செயலா் பி.பகவதியப்பன், ஒன்றிய மீனவரணி செயலா் அருள், லீபுரம் ஊராட்சி முன்னாள் கவுன்சிலா் கே.லீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி 18ஆவது வாா்டு வாவத்துறையில் சட்டமன்ற தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா். இதில் வாா்டு கவுன்சிலா் ஆட்லின் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.