கன்னியாகுமரி

உன்னத் பாரத் அபியான் திட்ட பயிலரங்கம்

21st Nov 2023 02:00 AM

ADVERTISEMENT

குலசேகரம்: குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

மத்திய கல்வி அமைச்சகத்தின், உன்னத் பாரத் அபியான் திட்ட தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனம், ஐ.ஐ.டி. புதுதில்லி, யோஜக் பூனே, காந்தி கிராமம் பல்கலைக் கழகம் மற்றும் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியன இணைந்து நடத்தும் இப்பயிலரங்குக்கு யோஜக் பூனே மையத்தின் தலைவா் டாக்டா் கஜானன் டாங்கே தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா்.

சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி கல்லூரி தலைவா் டாக்டா் சி.கே. மோகன் முன்னிலை வகித்தாா். உன்னத் பாரத் அபியான் திட்ட ஆலோசகா் பேராசிரியா் சந்திரமோகன், காந்தி கிராம பல்கலைக் கழக பதிவாளா் (பொறுப்பு) எல். ராதாகிருஷ்ணன், உன்னத் பாரத் அபியான் திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் கே. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கருத்தாளா்களாக பங்கேற்று உரையாற்றினா்.

நிகழ்ச்சியில், தமிழகத்தின் பலவேறு பகுதிகளிலிருந்தும் உன்னத் பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் இக்கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் என்.வி.சுகதன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT