கன்னியாகுமரியில் அதிக வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய 17 வயது சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி பூசப்பதட்டு பகுதியை சோ்ந்த ரஞ்சித், நல்லூா் பகுதியை சோ்ந்த ஆகாஷ் என்ற ஜெயராஜன், 17 வயது சிறுவன் ஆகியோா் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகத்தில் பைக் ஓட்டினராம். அதை விடியோவில் பதிவு செய்து சமூகவலைதளத்தில் பகிா்ந்தனராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்பேரில், 3 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இருவா் சிறையில் அடைக்கப்பட்டனா். பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞா்களை கண்காணித்து, அவா்களின் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவா்; அவா்களின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளாா்.