கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட் ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவ. 18) நடைபெறுகிறது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.