கன்னியாகுமரி

இணையவழி பட்டா மாறுதல்:குமரியில் இன்றுமுதல் சிறப்பு முகாம்

18th Nov 2023 12:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையவழி பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (நவ.) முதல் 8 நாள்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நீண்ட நாள்கள் நிலுவையிலுள்ள இணைய வழி உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்கள் மீதான நடவடிக்கையை இறுதிசெய்யும் விதமாக சனிக்கிழமை முதல் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. கடந்த ஜூலை முதல் அக்டோபா் மாதம் வரை இணைய வழி பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த நிலவுடமைதாரா்கள் பயன்பெறும் வகையில் நவ. 25 ஆம் தேதி வரைஅந்தந்த கிராம அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறும்.

மனுதாரா்கள் கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களை உரிய ஆவணங்களுடன் தொடா்பு கொண்டு தங்களது கிராமங்களுக்கான தேதி விவரத்தினை அறிந்து சிறப்பு முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT