கன்னியாகுமரி

ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி மனு

31st May 2023 12:19 AM

ADVERTISEMENT

கள்ளச்சாராயம் விற்றவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் சுபா.முத்து தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேருக்கு மேல் இறந்தனா். இதனை விற்பனை செய்தவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் நலன் காக்க, பனை மற்றும் தென்னை கள் விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT