கன்னியாகுமரி

இடைக்கோடு பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

DIN

இடைக்கோடு பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகளில் பாரபட்சம் காட்டுவதாக கூறி திமுக உறுப்பினா்கள் 8 போ் 4 ஆவது நாள்களாக நடத்தி வந்த உள்ளிருப்பு போராட்டம் திங்கள்கிழமை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இடைக்கோடு பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. பாஜகவைச் சோ்ந்த உமாதேவி தலைவராக உள்ளாா். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்துக்கு வா்ணம் பூசுதல், கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் முறைகேடு உள்ளதாகவும், திமுக உறுப்பினா்களின் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்வதில் பாரபட்சம் காட்டி வருவதாகவும் கூறி, பேரூராட்சித் தலைவரை கண்டித்து பேரூராட்சி துணைத் தலைவா் ஷாஜி உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் 8 போ் வெள்ளிக்கிழமை முதல் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டம் 4 ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்த நிலையில், அவா்களிடம் மாவட்ட பேரூராட்சிகளின் செயற்பொறியாளா் புஸ்பலதா, பொறியாளா் போஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினா். அப்போது, இப் பிரச்னை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும், பாரபட்சமின்றி அனைத்து வாா்டுகளிலும் பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

SCROLL FOR NEXT