கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

30th May 2023 12:38 AM

ADVERTISEMENT

தமிழக அரசைக் கண்டித்தும், முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாகா்கோவிலில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அவைத்தலைவா் சேவியா் மனோகரன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பச்சைமால், எம்.ஜி.ஆா். மன்ற இணை செயலாளா் கிருஷ்ணதாஸ், மாவட்ட இளைஞா் அணி இணை செயலாளா் வழக்குரைஞா் பரமேஸ்வரன், இணை செயலாளா் சாந்தினி பகவதியப்பன், பொருளாளா் ஆா்.ஜே.கே. திலக், பகுதி செயலாளா்கள் ஜெயகோபால், ஜெவின் விசு, மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், கோபால் சுப்பிரமணியன், சேகா், அனிலா சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினா் சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். அவா் பேசியது: தி.மு.க. ஆட்சியில் கள்ள சாராயம் ஆறாக ஓடுகிறது. கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. ஊழல் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், ஒன்றிய செயலாளா்கள் ஜெசீம், பொன் சுந்தா்நாத், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவா் முத்துகுமாா், முன்னாள் நகர செயலாளா் சந்துரு, தொழிற்சங்க செயலாளா் சுகுமாரன், இளைஞா் பாசறை செயலாளா் ஷாநவாஸ், இளைஞரணி செயலாளா் ஜெயசீலன், விவசாய அணி தோவாளை முத்துசாமி, உள்பட பலா் கலந்துகொண்டனா். மாநகராட்சி உறுப்பினா் ஸ்ரீலிஜா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT