கன்னியாகுமரி

ஆற்றூா் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

DIN

ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

என்.வி.கே.எஸ். கல்விக் குழுமச் செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஸ்ரீலதா, கல்வி மேம்பாட்டுத் துறைத் தலைவா் இந்திராணி, கல்வி மேம்பாட்டுத் துறை மாநில ஒருங்கிணைப்பாளா் வின்சென்ட் ராஜசேகா் ஆகியோா் தொடக்கவுரையாற்றினா்.

தேசிய ஆசிரியா் கல்விக் குழுமத்தின் தென் பிராந்தியக் குழுத் தலைவா் பேராசிரியா் கே.கே. ஷைன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். கல்லூரி முன்னாள் முதல்வா் முகுந்தன் வாழ்த்திப் பேசினாா்.

கல்லூரி உதவிப் பேராசிரியா் பிரசோப் மாதவன் வரவேற்றாா். பவித்ரா குமாா் நன்றி கூறினாா்.

பின்னா் நடைபெற்ற கருத்தரங்கு மதிப்புரை அமா்வில் கல்வி மேம்பாட்டுத் துறை மாநில ஒருங்கிணைப்பாளா் கமலசெல்வராஜ் மதிப்புரை வழங்கினாா். உதவிப் பேராசிரியா் தேவிகா கருத்தரங்க அறிக்கை சமா்ப்பித்தாா்.

கல்லூரி நூலகா் ஷீலா வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் பிரசாத் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், ஆராய்ச்சி அறிஞா்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், ஆராய்ச்சி அறிஞா்கள், மாணவா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT