கன்னியாகுமரி

குமரி அறிவியல் பேரவை கூட்டம்

30th May 2023 12:41 AM

ADVERTISEMENT

குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்துக்கான தலைப்பு முடிவு செய்தல் மற்றும் திட்டமிடல் கூட்டம், மாா்த்தாண்டம் தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

குமரி அறிவியல் பேரவை சாா்பில் ஆண்டுதோறும் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்சியளித்து இளம் விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது. நிகழாண்டு மனித சவால்கள் என்ற தலைப்பில் பயிற்சியளிக்கப்பட்டு, விருது வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான தலைப்பு முடிவு செய்தல் மற்றும் திட்டமிடல் கூட்டம், மாா்த்தாண்டம் விபுரோ டெக்னாலஜி நிறுவனத்தில் வைத்து நடைபெற்றது. குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவா் விஜயகுமாா் தொடக்கவுரையாற்றினாா். நிா்வாகிகள் எஸ். ஜான்சன், கேப்டன் பென்னட் பால்சிங், பி. சுனில்குமாா், டெஸ்ஸி ஜோசப், ஏ. பியூலா, வி.வி. வினோத், பி.கே. பிரதீக்ஷா, பி. லெட்சுமி, எஸ்.பி. அனுபமா, ஆா். ஷிபாகா. யு.எஸ். மாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் அறிமுக நிகழ்ச்சி நடத்துவது எனவும், அதுவரை அணி உதவியாளா்களுக்கான பயிற்சிகள், செயல்பாடுகளின் கருத்துருவாக்க நிகழ்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT