கன்னியாகுமரி

மாடித் தோட்டத்தில் டிராகன் பழம்!

30th May 2023 12:37 AM

ADVERTISEMENT

திருவட்டாறு பகுதியில் வீட்டு மாடித் தோட்டத்தில் விளைந்த டிராகன் பழத்தை அப்பகுதியினா் வியப்புடன் பாா்த்துச் சென்றனா்.

வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுபவா் எல். மீனாம்பிகா. இவரது வீடு திருவட்டாறு காங்கரையில் உள்ளது. வீட்டின் மொட்டை மாடியில், மாடித் தோட்டம் அமைத்து

பல்வேறு செடி வகைகளுடன் டிராகன் பழ செடியையும் நடவு செய்திருந்தாா். தற்போது அச் செடியில் டிராகன் பழங்கள் விளைந்திருக்கின்றன. அதிக வெயில் உள்ள பகுதிகளில் வளரும் இயல்புடைய டிராகன் செடிகள், அதிக மழைப் பொழிவு உள்ள பகுதியிலும் காய்த்திருப்பது இப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மாடித் தோட்டத்தில் விளைந்துள்ள டிராகன் பழங்களை இப் பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT