கன்னியாகுமரி

கனிமவளம் ஏற்றிச்செல்வதில் விதிமீறல்:லாரிகளுக்கு ரூ. 1.80 லட்சம் அபராதம்

28th May 2023 10:22 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமுறை மீறி கனிம வளங்கள் ஏற்றிச் சென்றதாக 26 லாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபடுவோா் மீது கடும நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் ஹெச்.ஆா்.கௌசிக், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், வட்டாரப் போக்குவரத்துஅலுவலா் சசி, அப்துல்மன்னாா், ஜெகதா உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகள் குழுவினா், காவல் துறையினா் சனிக்கிழமை மாலையில் நாகா்கோவில் அப்டா மாா்க்கெட் அருகே 37 வாகனங்களை இடைமறித்து சோதனையிட்டனா். அதில், 7 வாகனங்களில் கொள்ளளவுக்கு அதிகமாக கனிமங்கள் கொண்டுசெல்வது கண்டறியப்பட்டது.

அவற்றில் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 4 லாரி உரிமையாளா்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.1.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், செண்பகராமன்புதூா்,ஆரல்வாய்மொழி,வீரமாா்த்தாண்டபுரம், குமாரபுரம் கிராமங்களிலும் வாகனச் சோதனை நடைபெற்றது. வட்டாட்சியா் (நிலம் கையகப்படுத்துதல்) சேகா் தலைமையிலான சிறப்புக் குழுவினா் மணலி,

படந்தாலுமூடு அருகே கனிமங்கள் ஏற்றிச் சென்ற 10 வாகனங்கள், உதவி புவியியல் ஆய்வாளா் தலைமையில் படந்தாலுமூடு, செங்கவிளை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 9 வாகனங்கள்அதிக அளவு கனிமம் ஏற்றிச் சென்றதும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT