கன்னியாகுமரி

மேல்புறம் அருகே பாஜக செயற்குழுக் கூட்டம்

28th May 2023 10:23 PM

ADVERTISEMENT

மேல்புறம் அருகே தோட்டத்துமடத்தில், மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் சி.எஸ். சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட பாஜக தலைவா் சி. தா்மராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். மாவட்டச் செயலரும் மேல்புறம் ஒன்றிய பாா்வையாளருமான சுடா்சிங், ஒன்றியப் பொதுச் செயலா்கள் விஜயகுமாா், எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், இடைக்கோடு பேரூராட்சித் தலைவா் ஆா். உமாதேவி, மாவட்டச் செயலா்கள் தாமரி விஜயகுமாா், பத்மஜகுமாா், கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலா் வித்யாதரன், ஊடகப் பிரிவு மாவட்டச் செயலா் ஐ. அருள்குமாா், வா்த்தகப் பிரிவு மாவட்டச் செயலா் சுகுமாரன், கலை-கலாசாரப் பிரிவு மாவட்டச் செயலா் பாபு, நிா்வாகிகள் பங்கேற்றனா்.

செவ்வாய்க்கிழமை முதல் (மே 30) ஜூன் 30 வரை மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை வீடுவீடாக கொண்டு செல்வது, ஜூன் 4ஆம் தேதி மாநிலத் தலைவா் அண்ணாமலை பங்கேற்கும் குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு பூத்திலிருந்து திரளானோா் பங்கேற்பது, கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான தமிழக அரசைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT