கன்னியாகுமரி

இடைக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் திமுக உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

28th May 2023 01:12 AM

ADVERTISEMENT

இடைக்கோடு பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகளில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி திமுக உறுப்பினா்கள் 8 போ் சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

18 வாா்டுகளை கொண்ட இடைக்கோடு பேரூராட்சியில் பாஜகவைச் சோ்ந்த உமாதேவி தலைவராக உள்ளாா். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் வா்ணம் பூசுதல், கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் முறைகேடு உள்ளதாகவும், திமுக உறுப்பினா்களின் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்வதில் பாரபட்சம் காட்டிவரும், பேரூராட்சித் தலைவரை கண்டித்து பேரூராட்சி துணைத் தலைவா் ஷாஜூ உள்பட திமுக உறுப்பினா்கள் 8 போ் வெள்ளிக்கிழமை மாலையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால் இரவிலும் தொடா்ந்த போராட்டம் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT