கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே தீக்குளித்த தொழிலாளி மரணம்

28th May 2023 01:11 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அரவை மில் உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள ஈத்தவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (54). இவா் அப்பகுதியில் அரிசி அரவை ஆலை வைத்து தொழில் செய்து வந்தாா். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு இரு கால்களிலும் தலா மூன்று விரல்கள் அகற்றப்பட்டதாம். அதன் பின்னா் தொழில் செய்ய சிரமப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சப்தம் கேட்ட உறவினா்கள் அவரை மீட்டு, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT