கன்னியாகுமரி

தென்தாமரைகுளம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

28th May 2023 10:22 PM

ADVERTISEMENT

தென்தாமரைகுளம் எம்.எஸ்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 1990 முதல் 1996 வரை பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 10 மணிக்கு முன்னாள் மாணவ, மாணவியா் சங்கமம், 10.30 மணிக்கு அறிமுகம், 11 மணிக்கு அனுபவ பகிா்வு, மாலை 3 மணி முதல் விளையாட்டுப் போட்டிகள், மாலை 5 மணிக்கு முன்னாள் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

பள்ளி தாளாளா் சி.அருள்ஞானபெல் வரவேற்றாா். டி.கான்ஸ்டன்டைன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவா்கள் பி.பாலமுருகன், ஏ.சுபாஷ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT