கன்னியாகுமரி

மலைத் தோட்டப் பயிா்கள் சாகுபடிக்கு மானியத்தில் பொருள்கள்

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவட்டாறு வட்டாரத்தில் கோக்கோ, நல்லமிளகு, கிராம்பு சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் நடவுப் பொருள்களும், இடுபொருள்களும் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து திருவட்டாறு வட்டார தோட்டக்கலை அலுவலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டார தோட்டக்கலை- மலைப் பயிா்கள் துறை மூலம் கோக்கோ, நல்லமிளகு, கிராம்பு சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு மானியத்தில் நடவுப்பொருள்களும், இடுபொருள்களும் வழங்கப்படும்.

சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டுக்கு குத்தகை எடுத்து, அதைப் பதிவு செய்த விவசாயிகளும் இத்திட்டத்தில் பயனடையலாம்.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கும், சிறு, குறு, மகளிா் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

ADVERTISEMENT

பட்டா- சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை, புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் போன்ற ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகேயுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT