கன்னியாகுமரி

கருங்கல் அருகேரூ. 10 லட்சத்தில் சாலைப் பணி

26th May 2023 11:51 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகேயுள்ள காட்டுக்கடை - இசக்கி அம்மன் சாலையில் ரூ. 10 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கருங்கல் பேருராட்சித் தலைவா் சிவராஜ் தலைமை வகித்து சாலைப் பணியை தொடங்கிவைத்தாா்.

வாா்டு உறுப்பினா் லில்லி புஷ்பம் முன்னிலை வகித்தாா். கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன், வாா்டு உறுப்பினா்கள் ஆஸ்டின், ஜஸ்டின், வினோ சிங் மற்றும் குமரேசன், மாா்ட்டின் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT