கன்னியாகுமரி

குழித்துறை விவசாயிக்கு தேசிய விருது

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சோ்ந்த விவசாயி சீயோனுக்கு தேனீ வளா்ப்போருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

உலக தேனீக்கள் தினத்தையொட்டி அண்மையில் புணேவில் நடைபெற்ற விழாவில், சீயோனுக்கு இந்த விருதை மத்திய சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் நாராயண் ராணே வழங்கினாா்.

கதா், கிராமத் தொழில் ஆணையத் தலைவா் மனோஜ்குமாா், மத்திய இணை அமைச்சா் பானு பிரதாப்சிங் வா்மா, கதா் கிராமத் தொழில்கள் ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT