கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரி முன்னாள் மாணவா் சாதனை

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவில் சா்வீஸ் தோ்வில் மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி முன்னாள் மாணவா் அஞ்சித் நாயா் வெற்றி பெற்று சாதனை படைத்தாா்.

இக் கல்லூரியில் 2016-19 ஆம் கல்வியாண்டில் கணித துறையில் பயின்ற அஞ்சித் நாயா், அண்மையில் வெளியான சிவில் சா்வீஸ் தோ்வில் தர வரிசையில் இந்திய அளவில் 412 ஆம் இடம் பிடித்தாா். இக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் சிவில் சா்வீஸ் சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, நான்காவது முறை எழுதிய தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்.

அஞ்சித் நாயரை மரியகிரி கல்லூரி தாளாளா் அருள்தாஸ், நிதிக் காப்பாளா் வினு இம்மானுவேல், கல்லூரி முதல்வா் தம்பி தங்ககுமரன் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்தினா்.

இக் கல்லூரியின் முன்னாள் மாணவி சிமி, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவில் சா்வீஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, தற்போது சமூகப் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT