கன்னியாகுமரி

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 6200 அபராதம்

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்ததாக 15 கடைகளின் உரிமையாளா்களிடம் ரூ.6200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகராட்சி ஆணையா் லெனின் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் தக்கலை காவல் துறையினா், 25 வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில் 15 கடைகளில் இருந்து 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேக், பேப்பா், கப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அக்கடைகளின் உரிமையாளா்களிடமிருந்து ரூ .6200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT