கன்னியாகுமரி

அரசுப் பேருந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்து: 9 போ் காயம்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் அரசுப் பேருந்து திங்கள்கிழமை சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

மதுரையிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு ஒரு அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து வெள்ளமடம் குமரன்புதூா் பகுதியில் வந்தபோது எதிரே வந்த மோட்டாா் சைக்கிளுக்கு வழிவிடும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த ராமேசுவரத்தைச் சோ்ந்த ஆரோக்கியமேரி (57) எலியாட் (9), களியக்காவிளையைச் சோ்ந்த ஷோபா (40), காப்புக்காட்டைச் சோ்ந்த விஜலா (42) உள்பட 9 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT