கொல்லங்கோடு அருகே கிணற்றில் பொருத்தியிருந்த மின் மோட்டாரை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை, சூசைபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த சுனில்குமாா் மனைவி மேரிவிமலா ஆஷா (33). சின்னத்துறையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வரும் இவா், ஏகேஜி நகா் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் மின் மோட்டாா் பொருத்தியிருந்தாா். அதை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.