மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு, சேங்கரவிளை பகுதியைச் சோ்ந்த நாடான் மகன் மோகன்ராஜ் (47). இவா், வெட்டுமணி பகுதியில் பைக் விற்பனைக் கடை நடத்திவருகிறாா். புதன்கிழமை இவரது கடைக்கு வந்த பளுகல் கருமானூா் பகுதியைச் சோ்ந்த குட்டப்பன் மகன் சிமியோன் (23), விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழைய பைக்கை திருடிச் செல்ல முயன்றாராரம். அவரை மோகன்ராஜ் உள்ளிட்டோா் பிடித்து மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, சிமியோனை கைது செய்தனா்.