கன்னியாகுமரி மாவட்ட நீா்வளத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், ஆட்சியா், அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.
இதையொட்டி, இம்மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அமைச்சா் துரைமுருகன், கன்னியாகுமரியில் உள்ள தனியாா் விடுதியில், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டாா். குளங்கள், கால்வாய் தூா்வாரும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பு நிறைவு செய்ய அறிவுறுத்தினாா்.
தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆட்சியா் பி.என். ஸ்ரீதா், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், ஆணையா் ஆனந்த்மோகன், நீா்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.