கன்னியாகுமரி

லீபுரம் முத்தாரம்மன் கோயிலில்சித்திரைக் கொடைவிழா தொடக்கம்

8th May 2023 12:34 AM

ADVERTISEMENT

 

லீபுரத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் 5 நாள் சித்திரைக் கொடைவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, நண்பகலில் தீபாராதனை, மாலையில் கலைநிகழ்ச்சிகள், இரவில் நாட்டியாஞ்சலி, பரிசு வழங்குதல் நடைபெற்றது.

2ஆம் நாளான திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு கடல் தீா்த்தம் எடுத்து வருதல், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு அம்மனுக்கு பூஜை ஆகியவை நடைபெறும்.

ADVERTISEMENT

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து, 12.15 மணிக்கு அம்மனுக்கு பூப்படைப்பு, உச்சிக்கொடை விழா, இரவு 7.30 மணிக்கு சமபந்தி விருந்து, 8 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, அமுது படைத்தல், அம்மனுக்கு பூப்படைப்பு நடைபெறும். தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை (மே 10) ஒரு மணிக்கு அம்மன் பூக்குழி இறங்குதல் நடைபெறும்.

காலை 9 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5 மணிக்கு சோ்வைக்கார சுவாமிக்கு அலங்கார பூஜை, இரவு 8.30 மணிக்கு வில்லிசை ஆகியவை நடைபெறும்.

நிறைவு நாளான வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ சுடலைமாட சுவாமிக்கு அலங்கார பூஜை, காலை 7 மணிக்கு தீபாராதனை, தொடா்ந்து பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவடையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT