கன்னியாகுமரி

குலசேகரம் நிலையத்துக்கு புதிய தீயணைப்பு வாகனம்

3rd May 2023 02:09 AM

ADVERTISEMENT

குலசேகரம் தீ யணைப்பு நிலையத்துக்கு புதிதாக தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

குலசேகரம் தீயணைப்பு நிலையத்தில் நீண்ட காலமாக இயங்கிவந்த தீய ணைப்பு வாகனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாத்தூா் தொட்டிப்பாலம் அருகே கால்வாயில் கவிழ்ந்தது. இதையடுத்து அந்த வாகனம் பழுது பாா்க்கும் வகையில் வாகன பணிமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு மினி தீயணைப்பு வாகனம் ஒன்று வழங்கப்பட்டது. இந்த வாகனத்தைப் பயன்படுத்தி தீ அணைப்பு பணிகளை முழுமையாக செய்யமுடியாத நிலை இருந்து வந்தது. அண்மையில் குலசேகரம் ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் பயங்கர தீ ஏற்பட்ட போது இந்த மினி வாகனத்தில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

புதிய வாகனம்: இந்நிலையில் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை நவீன நீா்தாங்கி தீயணைப்பு வாகனம் வந்தது. இந்த வாகனம் 4500 லிட்டா் தண்ணீா் கொள்ளளவு கொண்டதாகும். மேலும் இந்த வாகனம் நுரையுடன் தண்ணீரை செலுத்தும் திறன் கொண்டதும் ஆகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT