கன்னியாகுமரி

நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு நிகழ்ச்சி: ஆட்சியா் ஆலோசனை

3rd May 2023 11:47 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில்,செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மே மாதம் முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, குமரியை முழு சுகாதாரமான, பசுமையான மாவட்டமாக மாற்றிட ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மகளிா்திட்டஇயக்குநா் இலக்குவன், உதவிஇயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் அ.புகழேந்தி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT