கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் பலி

3rd May 2023 02:08 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே கோட்டகம், மூத்தியறவிளை பகுதியைச் சோ்ந்தவா் தாம்சன் (66). லாரி ஓட்டுநா். இவா் திருவனந்தபுரத்திலிருந்து லாரியில் ஆக்கா் பொருள்களை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள கடையில் டீ குடித்துவிட்டு, சாலையை கடக்க முயன்றபோது , நித்திரவிளை ஆற்றுப்புறம் ராஜ செல்வகுமாா் மகன் ராகுல் (21) ஓட்டி வந்த பைக் அவா் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT