கன்னியாகுமரி

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.34 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

3rd May 2023 01:59 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 2.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் ஆய்வு மேற்கொண்டாா்.

நுள்ளிவிளை ஊராட்சிக்குள்பட்ட, கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய உள்விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை ஆய்வு மேற்கொண்டதோடு, ரூ.17 லட்சம் மதிப்பில் பேயன்குழி ஊராட்சி சேவை மைய மேல் தளத்தில் சூழலுக்குகந்த பைகள் தயாரிப்பு அலகு அமைக்கும் பணி, ரூ.10 லட்சம் மதிப்பில் பேயன்குழி நூலகத்தின் மேல்தளத்தில் சூழலுக்குகந்த காகித குவளை மற்றும் தட்டுகள் தயாரிக்கும் பணியை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், ரூ.21 லட்சம் மதிப்பில் கண்டன்விளை முதல் சரல்தட்டு வரை தாா்ச்சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.15 லட்சம் மதிப்பில் கண்டன்விளை முதல் சரல்தட்டு வரை சாலையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.17 லட்சம் மதிப்பில் கண்டன்விளை அரசு தொடக்கப் பள்ளி கட்டட மேல் தளத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுதல் மற்றும் ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.12.80 லட்சம் மதிப்பில் கண்டன்விளை அரசு தொடக்கப் பள்ளி இரு வகுப்பறை கட்டடம் கட்டுதல் பணியையும், சடையமங்கலம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.14.30 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தையல் மையத்தையும், முத்தலக்குறிச்சி ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் ஊராட்சி சேவை மைய முதல் தளத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணியையும், ரூ.21.50 லட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி ஊராட்சி அலுவலக முதல் தளத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணியையும், ரூ.45 லட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஊராட்சி சேவை மையம் அருகில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் கட்டடம் அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜாஆறுமுகநயினாா் (வட்டார ஊராட்சி), அன்பு (கிராம ஊராட்சி), ஊராட்சித் தலைவா்கள் பால்ராஜ் (நுள்ளிவிளை), சிம்சன் (முத்தலக்குறிச்சி), அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT