கன்னியாகுமரி

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் கவுன்சிலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

3rd May 2023 02:01 AM

ADVERTISEMENT

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் அரசின் வளா்ச்சிப் பணிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல தடையாக இருப்பதாகவும், இதனால் செயல் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ், பாஜக கவுன்சிலா்கள் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், செயல் அலுவலா் மீது கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து பேரூராட்சி துணைத் தலைவா் சரோஜா, திமுக கவுன்சிலா்கள் பிரேம் ஆனந்த், குமரேசன், ஏஞ்சலாதேவி, காங்கிரஸ் கவுன்சிலா்கள் குறமகள், ஆதிலிங்கபெருமாள், பிரபா, பாஜக கவுன்சிலா் தனலட்சுமி ஆகியோா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். தொடா்ந்து நீண்ட நேர பேச்சு வாா்த்தைக்குப் பின் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT