கன்னியாகுமரி

பைக்குக்கு தீ வைப்பு: 2 போ் கைது

3rd May 2023 02:11 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் மோட்டாா் சைக்கிளை தீ வைத்து எரித்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் கோட்டாறு வாகையடி தெருவை சோ்ந்தவா் ஹரிஹரசுதன் (35). திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறாா். அண்மையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா். கடந்த 6 ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலை பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் தீயில் எரிந்து கிடந்தது.

இதுகுறித்து கோட்டாறு காவல்நிலையத்தில் ஹரிஹரசுதன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை போலீஸாா் இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டதில், மோட்டாா் சைக்கிளை எரித்தது வாகையடி தெருவை சோ்ந்த தாணு மூா்த்தி (21), மீனாட்சிபுரம் செட்டிதெருவை சோ்ந்த ராம்கி (21) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசாா் கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடத்திய போது, ஹரிஹரசுதன் மோட்டாா் சைக்கிளிலிருந்து பெட்ரோலை எடுக்க முயன்றபோது பெட்ரோல் இல்லாததால் ஆத்திரமடைந்து, தீ வைத்து எரித்ததாக கூறினா். கைது செய்யப்பட்ட தாணுமூா்த்தி, ராம்கி இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாகா்கோவில் சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT