கன்னியாகுமரி

குருசுமலை திருப்பயணம் நாளை தொடக்கம்

DIN

குமரி மாவட்ட எல்லைப் பகுதியான வெள்ளறை-பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் தவக்கால திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தமிழக எல்லையையொட்டி, கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டத்தில் அமைந்துள்ள இம்மலையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தில் திருப்பயணம் நடத்தப்படுகிறது.

திருச்சிலுவை நிலைவாழ்வின் வாசல் என்ற மைய சிந்தனையின் அடிப்படையில் நிகழாண்டு திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை ( மாா்ச் 19-26) முதல் ஒரு வாரத்துக்கும், பின்னா், புனித வெள்ளியையொட்டி ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இத்திருப்பயணத்தில் மக்கள் குருசு மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் சென்று அங்குள்ள திருச்சிலுவையை வழிபடுவதுடன், திருப்பிலி- ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனா்.

முதல் நாள் மாலை 4.30 மணிக்கு நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயா் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் கொடியேற்றமும், அதைத் தொடா்ந்து மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு திவ்ய ஜோதி- கொடிப்பயணமும் நடைபெறுகிறது. பின்னா், திருப்பயண தொடக்க திருப்பலி, மலை உச்சியில் கொடியேற்றம், மலை உச்சியில் திருப்பலி என அடுத்தடுத்து திருப்பயண வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மேலும், மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல்- எண்ம (டிஜிட்டல்) சேவைகள் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், கேரள மாநில எம்எல்ஏக்கள் ஹரீந்திரன், சதீஷ், ஜோய், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினா் பங்கேற்கின்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் அருள்பணியாளா்கள், திருப்பயண ஒருங்கிணைப்புக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT