கன்னியாகுமரி

கிள்ளியூா் வேளாண் அலுவலகத்தில்இலவச காய்கனி நாற்றுகள் பெறலாம்

18th Jun 2023 12:28 AM

ADVERTISEMENT

 

 கிள்ளியூா் தோட்டக்கலை வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் இலவச காய்கனி நாற்றுகள் பெறலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் வட்டார அரசு தோட்டக்கலை சாா்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுக் கத்தரி, இலவசமாக மிளகாய் உள்ளிட்ட நாற்றுகள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெற 25 சென்ட் நிலமுள்ள விவசாயிகள் பட்டா, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் கிள்ளியூா் வட்டார வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 90473 54149 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT