திருநெல்வேலியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய ஒரு லாரி, நாகா்கோவில் நோக்கி சனிக்கிழமை காலை புறப்பட்டது. நாகா்கோவில் அருகேயுள்ள தேரேகால்புதூா் வந்தபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.